பாடசாலை கீதம்
இராகம்: மோகனம் தாளம்: ஆதி
(திஸ்ர நடை)
போற்றுவோம் போற்றுவோம் போற்றுவோம்
புகழும் நீதி கலைமள் மேவும் சிகரமாகத் திகழும் தாயைப்
(போற்று)
அழகு மலைகள் சூழ்ந்ததெங்கள் பதுளை மா நகரிலே
அழகுநிறை கணபதியொடு ஜயஜயவென வாழ்த்தும் தாயை
பண்புடன் பலகலைகள் ஓங்கும் செந்திழ்க் காவியம்
பண்வுடன் “உழை உயர்” என அறிவையூட்டும் தாயினைப்
(போற்று)
மருத்துவமும் பொறியியலும் சட்டமுகாமைத்துவமும்
பல்கலை சென்று கற்றிட வித்திடும் எங்கள் தாயினை
கலைவளங்கள் எழில்பெறும் சரஸ்வதி கல்லூரியில்
காத்து எம் அறிவை வளர்க்கும் ஞான அறிவின் தாயினை
(போற்று)
ஆங்கிலமொழி ஓங்கிவிளங்க ஆய்ந்த செந்தமிழ்க் காவியம்
ஆரியமிசை கீத நடனம் அரிய கணிதம் ஓவியம்
பாங்குமிகுந்த சாஸ்திரத்துடன் பயிற்சித்தொழில்கள் கற்று நாமும்
பக்குவமாய் வெளியேற பயிற்றும் எங்கள் தாயினைப்
(போற்று)